Thursday, February 14

இளிச்ச வாய் இந்தியர்களே .. இதோ உங்களுக்காக

பெட்ரோல் ‌விலை ‌லி‌ட்டரு‌க்கு 2 ரூபா‌ய் உய‌‌‌ர்‌ந்தது!
வியாழன், 14 பிப்ரவரி 2008
பெட்ரோல்- டீசல் விலையை லிட்டருக்கு முறையே ரூ.2, ரூ.1 என மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.டெல்லியில் இன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாயும் அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு ச‌ர்வதேச சந்தையில் க‌ச்சா எ‌ண்ணெ‌ய் விலையேற்றத்தா‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள இழ‌ப்பை ஈடுகட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இ‌ந்த விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.840 கோடி லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

No comments: