புனே விமான நிலையம் மூடப்பட்டது
புனே- செவ்வாய்கிழமை, 12 பிப்ரவரி 2008
புதுப்பிக்கும் பணிக்காக புனே விமான நிலையம் இன்று மூடப்பட்டது. புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டியதிருப்பதால் புனே விமான நிலையம் பிப்ரவரி 12 (இன்று)முதல் 26 ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.எனவே மேற்கூறிய காலக்கட்டத்தில் புனே விமான நிலையத்தில் எந்த வித விமானங்களும் புறப்படவோ அல்லது தரை இரங்கவோ செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக உள்நாட்டிலிருந்தோ அல்லது வெளிநாடுகளிலிருந்தோ வரும் பயணிகள் புனே விமான நிலையத்தில் விமானம் ஏறவோ அல்லது தரை இறங்கவோ நினைத்தால் மும்பை விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மேற்கூறியபடி 15 நாட்களுக்கு ஒரு விமான நிலையம் மூடப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment